கன்னியாகுமரியில் இன்று முதல்வர் ஆய்வு!

 

கன்னியாகுமரியில் இன்று முதல்வர் ஆய்வு!

கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி கன்னியாகுமரியில் இன்று ஆய்வு செய்கிறார்.

கன்னியாகுமரியில் இன்று முதல்வர் ஆய்வு!

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் தொற்று குறைய தொடங்கியுள்ளது. இதனிடையே ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

கன்னியாகுமரியில் இன்று முதல்வர் ஆய்வு!

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கன்னியாகுமரியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஇன்று ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் அங்கு முதல்வர் பழனிசாமி நலத்திட்ட உதவிகளை அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகர்கோவில் செல்கிறார் .அங்கே பிற்பகல் 3 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் அவர் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். முதல்வர் பழனிசாமியின் வருகையையொட்டி விருந்தினர் மாளிகை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.