ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கும் திட்டம்… நாளை துவக்கி வைக்கிறார் முதல்வர்!

 

ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கும் திட்டம்… நாளை துவக்கி வைக்கிறார் முதல்வர்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்.

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அவர்களது படிப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் 18 வயது நிறைவடைந்தவுடன் ரூபாய் 5 லட்சம் ரூபாய் பணம் வட்டியுடன் சேர்த்து கொடுக்கப்படும் என்றும் அதுவரை அந்த பணம் வைப்பு நிதியாக வைக்கப்படும் என்றும் முதல்வர் முதல்வர் தெரிவித்திருந்தார்.

ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கும் திட்டம்… நாளை துவக்கி வைக்கிறார் முதல்வர்!

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதில், பெற்றோர்களை இழந்த குழந்தை தற்போது தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தால் அதே பள்ளியில் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான செலவை முதல்வர் நிவாரண நிதியிலிருந்தோ அல்லது பிரதமர் மோடி உதவி திட்டத்தில் இருந்தோ செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. மேலும், உயிரிழந்த பெற்றோர்கள் அரசு ஊழியராக இருப்பின் அவர்களது குழந்தைகளுக்கு இந்த சலுகை கிடைக்காது என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வங்கிக் கணக்கில் வைக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.