செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 11 ஆம் தேதி முதல்வர் ஆய்வு!

 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 11 ஆம் தேதி முதல்வர் ஆய்வு!

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 11 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. அதனால் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 15 மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் நிதி அளித்து வருகிறார்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 11 ஆம் தேதி முதல்வர் ஆய்வு!

நேற்று திருவள்ளூர் மாவட்டத்துக்கு சென்ற முதல்வர் 7,528 பயனாளிகளுக்கு ரூ.51.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிலையில் வரும் 11 ஆம் தேதி செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையை அடுத்து பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களுள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அடங்கும் என்பது நினைவுக் கூரத்தக்கது.