கடலூர் மாவட்டத்தில் 27 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு!

 

கடலூர் மாவட்டத்தில் 27 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பாதிப்பு குறைந்து வருவதாகவும் உயிரிழப்புகள் குறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாக முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதனால் தற்போது வாகன புழக்கங்கள் அதிகரித்ததோடு, பிற மாவட்டங்களுக்கு செல்ல மட்டுமே சில தடைகள் நீடிக்கிறது. குறிப்பாக இபாஸ் முறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்தே மக்கள் அதிகமாக பயணிக்கின்றனர் என்றே சொல்லலாம்.

கடலூர் மாவட்டத்தில் 27 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு!

இதனிடையே ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணி குறித்து விசாரணை நடத்தி வருகிறார். சமீபத்தில் கள்ளக்குறிச்சி, நெல்லை, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதல்வர் சென்றதைத்தொடர்ந்து இன்று நாமக்கல் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்த அவர், பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிலையில், வரும் 27 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி கடலூர் மாவட்டத்துக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.