“தள்ளுபடி செய்த கடனை எப்படி ஸ்டாலின் தள்ளுபடி செய்வார்?” – திருவாரூரில் எடப்பாடி கிடுக்குப்பிடி!

 

“தள்ளுபடி செய்த கடனை எப்படி ஸ்டாலின் தள்ளுபடி செய்வார்?” – திருவாரூரில் எடப்பாடி கிடுக்குப்பிடி!

தமிழக முதலமைச்சர் தற்போது மீண்டும் சூறாவளி பிரச்சாரம் செய்துவருகிறார். தன்னை எதிர்க்கும் ஸ்டாலினையும் திமுகவையும் விமர்சனம் செய்து மக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிமுக வேட்பாளர் சி.எஸ்.சுரேஷ்குமாரை ஆதரித்து இன்று முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு மூலம் தமிழகம் முழுவதும் ரூ.9,300 கோடி இழப்பீடு தொகையைப் பெற்று தந்த அரசு ஜெயலலிதா அரசு.

“தள்ளுபடி செய்த கடனை எப்படி ஸ்டாலின் தள்ளுபடி செய்வார்?” – திருவாரூரில் எடப்பாடி கிடுக்குப்பிடி!

அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் புரவி புயல், நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,700 கோடி நிவாரணம் வழங்கியுள்ளோம். விவசாயிகள் படும் துன்பத்தை நான் ஒரு விவசாயி என்பதால் அனுபவரீதியாக உணர்ந்தவன். விவசாயிகள் வாங்கிய கடனை நான் தள்ளுபடி செய்து உத்தரவிட்டேன். அதற்கான ரசீதையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே தள்ளுபடி செய்த கடனை எப்படி ஸ்டாலின் தள்ளுபடி செய்வார். எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார் பாருங்கள்.

கடந்த திமுக ஆட்சியின்போது இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்பதாக திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள். கொடுக்கவில்லை. மாறாக, திமுகவினர் நிலத்தை பிடுங்காமல் இருந்தாலே போதும் என்றநிலைதான் இருந்தது என்பதை யாரும் மறந்துவிடவில்லை. திருத்துறைப்பூண்டியில் மணலி கந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும். முத்துப்பேட்டை தனி வட்டமாக உருவாக்கப்படும். ஆகவே அனைவரும் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்” என்றார்.