“அன்பு, சகோதரத்துவதுடன், ஒற்றுமையாக வாழ வேண்டும்” : முதல்வர் பழனிசாமியின் பக்ரீத் வாழ்த்து!

“அன்பு, சகோதரத்துவதுடன், ஒற்றுமையாக வாழ வேண்டும்” : முதல்வர் பழனிசாமியின் பக்ரீத் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரானஇப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் நாளை( 1ம் தேதி) கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளது.

“அன்பு, சகோதரத்துவதுடன், ஒற்றுமையாக வாழ வேண்டும்” : முதல்வர் பழனிசாமியின் பக்ரீத் வாழ்த்து!

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்ரீத் பண்டிகையையொட்டி வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவரது வாழ்த்தில், ” இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது பக்ரீத் நல்வாழ்த்துகள். திருக்குரான் போதிக்கும் நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனித நேயத்தை மக்கள் மனதில் நிறுத்த வேண்டும், அன்பு, சகோதரத்துவதுடன், ஒற்றுமையாக வாழ வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.