7 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற செய்கிறது- முதலமைச்சர்

 

7 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற செய்கிறது- முதலமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார், நேற்று அறந்தாங்கியில் இருக்கும் ஒரு வறண்ட குளத்தில் சடலமாக கண்டெடுத்தனர். அந்த சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இவ்வாறு தமிழகத்தில் பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி கொலை செய்யப்படும் சம்பவம் தொடருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.