“பகுத்தறிவு பகலவனை நினைவு கூர்கிறேன்” : முதல்வர் பழனிசாமி ட்வீட்!

 

“பகுத்தறிவு பகலவனை நினைவு கூர்கிறேன்” : முதல்வர்  பழனிசாமி ட்வீட்!

பெரியாரின் நினைவு தினம் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.

“பகுத்தறிவு பகலவனை நினைவு கூர்கிறேன்” : முதல்வர்  பழனிசாமி ட்வீட்!

பெரியாரின் 47 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சமூக நீதி, பெண் விடுதலை, திராவிடர் விடுதலை என சமூகத்திற்காக அரும்பாடுபட்டவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து அதன் கொள்கைகளை உரக்க கூறி வந்தவர். மூட நம்பிக்கை குறித்த தனது கருத்துக்களை ஆணித்தரமாக சொல்லி வந்த பெரியார் அதை மக்களிடமும் புகட்டி வந்தார். பெரியார் தனது 94 ஆவது வயதில் வேலூரில் காலமானார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.