ஊரடங்கு எதிரொலியால் அதளபாதாளத்தில் பொருளாதாரம்! தமிழகத்தில் சமூக பரவலா?- முதலமைச்சர் விளக்கம்

 

ஊரடங்கு எதிரொலியால் அதளபாதாளத்தில் பொருளாதாரம்! தமிழகத்தில் சமூக பரவலா?- முதலமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இரண்டு மாதமாக ஒரு காட்டாற்று வெள்ளத்தை கடப்பதுபோல் ஓர் இக்கட்டான சூழ்நிலையை உங்களின் ஒத்துழைப்பு மற்றும் பேராதரவுடன் கடந்து வந்துள்ளோம். இந்த கொரோனா நமது இயல்பு வாழ்க்கையை மட்டுமின்றி பொருளாதாரத்தையும் பாதித்துவிட்டது. சமூக பரவல் என்ற நிலைக்கு தமிழ்நாடு ஒருபோதும் சென்று விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு எதிரொலியால் அதளபாதாளத்தில் பொருளாதாரம்! தமிழகத்தில் சமூக பரவலா?- முதலமைச்சர் விளக்கம்

4.6.2020 வரை தமிழ்நாட்டில்5.50 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சகோதர சகோதரிகளே சுறுசுறுப்பான நீங்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பது அத்தனை எளிதான காரியமல்ல. நமது கூட்டு முயற்சியினால் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்.தமிழ்நாட்டின் அனைத்து 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு  நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஏப்ரல் 2ஆம் தேதி முதலே வழங்கப்பட்டது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஊரடங்கு காலத்தில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க நமது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பேராசிரியர் ரங்கராஜன் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அரசு அமைத்துள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த நோய் பரவல் தடுப்பது சாத்தியமில்லை

மொத்தமாக 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரிசி விலை இல்லாமல் வழங்கப்படுகிறது, பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள் & முடிதிருத்துவோருக்கும் ரூ.2000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது, பயிர்க்கடன் & கூட்டுறவு கடன் & மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 86% பேருக்கு அறிகுறிகள் இல்லை; முன்களப் பணியாளர்களின் பணி மகத்தானது.” என தெரிவித்தார்.