“ஸ்டாலின் ஒன்னும் எனக்கு சர்டிஃபிகேட் கொடுக்க வேணாம்” – முதல்வரின் அதிரடி பேச்சு!

“ஸ்டாலின் ஒன்னும் எனக்கு சர்டிஃபிகேட் கொடுக்க வேணாம்” – முதல்வரின் அதிரடி பேச்சு!

கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “காவிரியில் ரூ.406 கோடி செலவில் கதவணை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. கட்டளை கதவணை ரூ.150 கோடியில் புனரமைக்கும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது. விவசாய திட்டங்களுக்கு தமிழக அரசு உடனுக்குடன் நிதியை ஒதுக்கி வருகிறது” என்று கூறினார்.

“ஸ்டாலின் ஒன்னும் எனக்கு சர்டிஃபிகேட் கொடுக்க வேணாம்” – முதல்வரின் அதிரடி பேச்சு!

தொடர்ந்து, “விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. விவசாயிகள் பாதிக்கும் எந்த திட்டங்கள் என்றாலும் அதை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் சட்டம் குறித்து சில விஷமத்தனமான பரப்புரை செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

“ஸ்டாலின் ஒன்னும் எனக்கு சர்டிஃபிகேட் கொடுக்க வேணாம்” – முதல்வரின் அதிரடி பேச்சு!

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்லி தான் நான் விவசாயியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என காட்டமாக தெரிவித்த முதல்வர், “எனக்கு விவசாயி என மு.க ஸ்டாலின் சான்றிதழ் தர அவசியமில்லை. நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்த போது அதில் அங்கம் வகித்த திமுக ஏன் மௌனமாக இருந்தது? அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே நீடிக்கின்றன. யாரும் விளக்கவில்லை” எனத் தெரிவித்தார்.