விளம்பரம் தேட நான் நடிகன் அல்ல; விவசாயி- முதல்வர் பழனிசாமி

 

விளம்பரம் தேட நான் நடிகன் அல்ல; விவசாயி- முதல்வர் பழனிசாமி

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன், ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசு அதிக சலுகைகள் அதிகரித்ததால் கிசான் திட்டத்தில் தவறு நடைபெற்றுள்ளது. தவறு நடந்த இடங்களில் குழு அமைத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விளம்பரம் தேட நடிகனல்ல, விவசாயி

திருவள்ளூர் மாவட்டம் சென்னையை ஒட்டிய மாவட்டமாக இருப்பதால், திருவள்ளூரிலிருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து திருவள்ளூருக்கும் அதிக மக்கள் வந்து செல்லக்கூடிய நிலை உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய தொழில்கள் மற்றும் தொழிற்பேட்டைகள், சிறு தொழில்கள் நிறைந்துள்ளதால், பணிக்கு வந்து செல்பவர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும்பொழுது மாண்புமிகு அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்ட வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

விளம்பரம் தேட நான் நடிகன் அல்ல; விவசாயி- முதல்வர் பழனிசாமி

திருவள்ளூர் மாவட்டம் வேளாண் தொழில்கள் நிறைந்த பகுதி. ஏரிகள் மற்றும் ஏரிப்பாசனம் நிறைந்த மாவட்டம். குடிமராமத்துத் திட்டம் என்னால் அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கிராமப் பகுதியிலுள்ள ஏரியிலும் பின்னர் திருவள்ளூர் மாவட்டத்திலும் துவக்கி வைக்கப்பட்டது. சென்னைக்குக் குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகள் இந்த மாவட்டத்தில் உள்ளன. ஏரிகளின் கொள்ளளவை அதிகரித்து, பருவ காலங்களில் பொழிகின்ற மழை நீர் முழுவதையும் சேமித்து வைக்க வேண்டுமென்பதற்கு குடிமராமத்துத் திட்டம் கொண்டு வரப்பட்டு தற்பொழுது சிறப்பாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஏரியில் நானே நேரில் வந்து இப்பணியைத் துவக்கி வைத்தேன். இது ஒரு சிறப்பான திட்டமென்று வேளாண் பெருமக்களும், பொது மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த திட்டத்தை, முழுக்க முழுக்க விவசாயிகளை உள்ளடக்கி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். குடிமராமத்துத் திட்டப் பணிகள் முழுவதும், அந்தந்தப் பகுதிகளிலுள்ள விவசாய சங்கங்கள், பாசனதாரர்கள், சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழகம் முழுவதும் நல்ல மழை பொழிந்து கொண்டுள்ளது, பல ஏரிகள் நிரம்பி கொண்டிருக்கின்றன. குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் தூர்வாரப்பட்ட ஏரிகளில் தண்ணீர் சேமிக்கக்கூடிய சூழ்நிலை அரசால்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம் தேட நான் நடிகன் அல்ல; விவசாயி- முதல்வர் பழனிசாமி

அதேபோல, இந்த மாவட்டத்தில் அதிக தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின் மூலமாக, கடந்த 2 ஆண்டுகளில் குடிமராமத்து திட்டம் மூலம் ரூபாய் 18.33 கோடி மதிப்பீட்டில் 107 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2019-20ஆம் ஆண்டு சுமார் ரூபாய் 10.17 கோடி மதிப்பீட்டில் 26 குடிமராமத்துப் பணிகள் முடிக்கப்பட்டு 4 பணிகள் மட்டும் முடியும் தருவாயில் உள்ளன. அதேபோல, எண்ணூர் முதல் எர்ணாவூர் குப்பம் வரை முதல் கட்டமாக 9 எண்கள் கொண்ட தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணி சுமார் ரூபாய் 38 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. மாதவரம், அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் ஏரிகளை புனரமைப்பு
மற்றும் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணி ரூபாய் 26 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது. தடுப்பணையைப் பொறுத்தவரை, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் கொசஸ்தலையாற்றின் குறுக்கே புதுக்குப்பம் மற்றும் குதிரைப்பள்ளம் இடையிலான கிராமத்தில் தடுப்பணை அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.