சென்னையில் 50% பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி- முதல்வர் பழனிசாமி

 

சென்னையில் 50% பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி- முதல்வர் பழனிசாமி

வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் செய்தியாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் “தலைமைச் செயலாளர் உடனே இதுவரை மாவட்ட ஆட்சியர் 12 முறை ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். தொடர்ச்சியான நடவடிக்கை கொடுத்த காரணத்தினால் இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்களுக்கும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள், காவல் துறை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி! பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது, இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது. நான்கு மாதங்களாக, சரியான நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா முககவசம், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் முதற்கட்டமாக வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் 50% பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி- முதல்வர் பழனிசாமி

சென்னை மாநகராட்சியில் 22532 காய்ச்சல் முகாம்கள் 14 லட்சம் பேர் பயன்படுத்துகிறார்கள். சென்னை மாநகராட்சியில் வீடு வீடாக சென்று காய்ச்சல் சளி இருமல் இருக்கிறதா என்பதை நேரடியாக சென்று கேட்டு வருகிறார் இதற்காக மட்டும் 20 ஆயிரம் பேர் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை மாநகராட்சியில் வைரஸ் தொற்று படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது. நடமாடும் மருத்துவமனை வாகன சென்று பரிசோதனை செய்து வருகிறார் என்று சொன்னால் மட்டும் 70 வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் தொழிற்சாலைகள் 50 % பணியாளர்கள் இயங்கி வருகிறது, பிற மாவட்டங்களில் 100 % செயல்பட தொடங்கியுள்ளனர். வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு பணி செய்தால் அவர்களை  அழைத்து வந்து அவர்களுக்கு உரிய பரிசோதனை செய்து பணியில் அமர்த்தலாம், இந்த அறிவுரை எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கு அது  சொல்லப்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.