நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்- முதல்வர் பழனிசாமி

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்- முதல்வர் பழனிசாமி

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு படை வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். உயிரிழந்த அந்த 2 படை வீரர்களுள் ஒருவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலால் லடாக்கில் தற்போது நிலவி வரும் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்- முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் நாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்காக ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். ராணுவ வீரர் பழனி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். வீர மரணம் அடைந்த பழனிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த ராமநாதபுரம் ஆட்சியருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.