அதிமுக அரசு கவிழும் என்று காத்திருந்தவர்கள் கனவு தகர்ந்துவிட்டது! – முதலமைச்சர் பழனிசாமி

 

அதிமுக அரசு கவிழும் என்று காத்திருந்தவர்கள் கனவு தகர்ந்துவிட்டது! – முதலமைச்சர் பழனிசாமி

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். ஆரம்பகட்ட நோய்களுக்கு சிகிச்சை, மருத்துவ பரிசோதனைகளை மினி கிளினிக்கில் செய்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இன்னும் ஒரு வாரத்திலிருந்து 10 நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளீனிக் திறக்கப்படும். ஏழை, எளிய கர்ப்பிணி பெண்கள் நலனுக்காக 500 படுக்கை வசதி கொண்ட மகப்பேறு பிரிவை சேலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கினார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைக்கு இணையான சிகிச்சைகள் கிடைக்கும்.

அதிமுக அரசு கவிழும் என்று காத்திருந்தவர்கள் கனவு தகர்ந்துவிட்டது! – முதலமைச்சர் பழனிசாமி

மருத்துவ காப்பீட்டை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ .5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராக முடியும். ஒருசிலர் குடும்பத்திற்காக அரசியல் கட்சி நடத்தி வருகின்றனர். அதிமுக அரசு கவிழும் என்று காத்திருந்தவர்கள் கனவு தகர்ந்துவிட்டது. தமிழகத்தில் பல மாவட்டங்கள் இருந்தாலும் முதலமைச்சர் மாவட்டம் என்ற பெருமை சேலத்திற்கு மட்டுமே உண்டு. சேலத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக உருவாக்கியது அதிமுக அரசு. வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக ஆட்சியில் ஒன்றுமே. செய்யவில்லை என்று திமுகவினர் கூறி வருகின்றனர். மக்களை யாரும் ஏமாற்ற முடியாது மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனக் கூறினார்.