தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? நாளை மீண்டும் மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

 

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? நாளை மீண்டும் மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 95,857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? நாளை மீண்டும் மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

இந்நிலையில் பொது முடக்கத்தை நீட்டிப்பதா இல்லையா? எத்தகைய தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்து தலைமை செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு மருத்துவ வல்லுநர் குழு உடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் நாளை மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. வரும் 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடையுள்ள நிலையில் அதை நீட்டிக்க தேவை உள்ளதா? என்பது குறித்து ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.