பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை: ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை: ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்

7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிவெடுப்பார் என மத்திய அரசின் சிபிஐ வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் விடுதலை தொடர்பான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும். வழக்கை 2 வாரம் தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் அந்த உத்தரவு ஆளுநருக்கு வருவதற்கு ஓர் இரு நாள் ஆகலாம். ஆகவே இன்று அல்லது நாளைக்குள் ஆளுநர் அமைச்சரவை முடிவின் மீது கையெழுத்திட்டு அரசானை வெளியிட்டு 7 பேரையும் விடுதலை செய்வார் எனக் கூறப்படுகிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை: ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்