“தொண்டை மட்டுமல்ல என் உயிரே போனாலும் பரவாயில்ல” : முதல்வர் பழனிசாமி

 

“தொண்டை மட்டுமல்ல என் உயிரே போனாலும் பரவாயில்ல” : முதல்வர் பழனிசாமி

உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி
கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் தேர்தலாக பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய அளவில் வாக்கு வங்கியை வைத்துள்ள அதிமுக இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதேபோல் திமுக வழக்கம் போல காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அதிமுக கூட்டணி பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.கடந்த 10 ஆண்டுக்களாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாடுபட்டு வருகிறது. அதேபோல் திமுகவோ கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில் இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. இதனால் இக்கட்சியின் தலைவர்களும் தீவிர வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர்,

“தொண்டை மட்டுமல்ல என் உயிரே போனாலும் பரவாயில்ல” : முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எந்த நேரத்திலும் ஸ்டாலின் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்.திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் என் உயிரைக் கொடுக்கவும் தயார்.பல பொதுக்கூட்டங்களில் பேசி வருவதால் எனது தொண்டை சரியில்லை.திமுகவை வீழ்த்த என் தொண்டை மட்டுமல்ல என் உயிரே போனாலும் பரவாயில்லை” என்றார்.