அம்மா திருமண மண்டபத்தை திறந்துவைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

அம்மா திருமண மண்டபத்தை திறந்துவைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபத்தை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். அப்போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பென்ஜமின், மாஃபா பாண்டியராஜன், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அம்மா திருமண மண்டபத்தை திறந்துவைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதனையொட்டி, அயப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி, மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திற்ந்து வைத்தார். சுமார் 12 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தில், 670 நபர்கள் வரை அமர இருக்கை வசதியுடன் கூடிய அரங்கமும், மணமகன் – மணமகள் அறையும் உள்ளது. மேலும், உணவு உண்ணும் கூடம், ஆண் – பெண் தனித்தனி அறைகள், குளியல் அறை, கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இந்த மண்டபம் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு மிக் குறைந்த வாடகைக்கு விடப்பட உள்ளது.