“கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசுவிழாவாக கொண்டாடப்படும்” – முதல்வர் அறிவிப்பு

 

“கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசுவிழாவாக கொண்டாடப்படும்” – முதல்வர் அறிவிப்பு

கிருபானந்த வாரியாரின் பிறந்தநாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சிறந்த முருக பக்தரும், ஆன்மீக சொற்பொழிவாளருமான கிருபானந்த வாரியார் தமிழகத்தில் சைவ சமய வளர்ச்சிக்கு அரும்பணி புரிந்தவர் ஆவார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள காங்கேயநல்லூரில் பிறந்த வாரியார் ஆன்மீகம் கடந்து, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நட்பு பாரட்டியும் வந்த பொருமைக்கு உரியவர்.

“கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசுவிழாவாக கொண்டாடப்படும்” – முதல்வர் அறிவிப்பு

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிருபானந்த வாரியாரின் பிறந்தநாளான ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி அரசு சார்பில் விழா எடுத்து கொண்டாடப்படும் என அறிவித்தார்.

அப்போது, எம்ஜிஆருக்கு பொன்மன செம்மல் என்ற பட்டத்தினை வாரியார் வழங்கியதையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு முருக பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.