கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: காணொளி வாயிலாக முதல்வர் பேச்சு

கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: காணொளி வாயிலாக முதல்வர் பேச்சு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது.

கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: காணொளி வாயிலாக முதல்வர் பேச்சு

ஊரடங்கு இன்னும் 2 நாட்களில் நிறைவடைய உள்ளதால், ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் காணொளி வாயிலாக பேசிய முதல்வர், கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் மட்டுமே 48 ஆயிரம் மாஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: காணொளி வாயிலாக முதல்வர் பேச்சு

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் வழங்கப்படுவதாகவும் கொரோனா காலத்தில் அதிக முதலீட்டை பெற்ற மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் 67,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகவும் கூறினார்.