தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா?..மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

 

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா?..மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நான்காம் கட்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. இதனிடையே ஊரடங்கு நீடிப்பதை பற்றி அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மே 31 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட 4ஆம் கட்ட ஊரடங்கு இரு தினங்களில் நிறைவு பெறுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா?..மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா.. இல்லையா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக முதல்வர் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட போது, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தான் ஊரடங்கை தளர்த்த முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். அதனால் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.