முடிவுக்கு வருமா பொதுமுடக்கம்?.. ஆட்சியர்களுடனான முதல்வரின் ஆலோசனை நிறைவு!

 

முடிவுக்கு வருமா பொதுமுடக்கம்?.. ஆட்சியர்களுடனான முதல்வரின் ஆலோசனை நிறைவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்ததால், மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அதன் பிறகு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலானது. இருப்பினும் மக்கள் தங்களை காத்துக் கொள்ள வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

முடிவுக்கு வருமா பொதுமுடக்கம்?.. ஆட்சியர்களுடனான முதல்வரின் ஆலோசனை நிறைவு!

தற்போது அமலில் இருக்கும் 7 ஆம் கட்ட தளர்வுடன் கூடிய பொதுமுடக்கம் கடந்த மாதம் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இது வரும் 31 ஆம் தேதியோடு முடிவடைய உள்ளதால் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோனை மேற்கொண்டார். ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா என்பது குறித்து காலை 10.30 மணியில் இருந்து நடைபெற்று வந்த ஆலோசனை 4 மணி நேரத்திற்கு பிறகு தற்போது நிறைவடைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து முதல்வர் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகே ஊரடங்கு குறித்த முக்கிய முடிவை முதல்வர் எடுப்பார் என கூறப்படுகிறது. அதே போல, மேலும் சில தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்பட உள்ளதாகவும் பொதுப்போக்குவரத்து சேவைக்கு அரசு அனுமதி அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.