தமிழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

 

தமிழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

கடந்த ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை நேற்று யுபிஎஸ்சி தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 829 பணியிடங்களுக்கு தேர்வு நடந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் நாகர்கோவிலை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தேசிய அளவில் 7 ஆம் இடமும் தமிழக அளவில் முதல் இடமும் பிடித்திருந்தார். இந்த நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த அனைவருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான பூரணசுந்தரி, பாலமகேந்திரனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்த முதல்வர், அவர்களின் விடா முயற்சியும் மன உறுதியும் வெற்றிக்கு வித்திட்டதாகவும் எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல என்பதற்கு அவர்கள் சான்றாக திகழ்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.