வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு தற்போதைய இபாஸ் நடைமுறை தொடரும்: முதல்வர் அறிவிப்பு!

 

வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு தற்போதைய இபாஸ் நடைமுறை தொடரும்: முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் இபாஸ் முறையை தகர்க்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை நீக்க முடியாது என தெரிவித்த முதல்வர், இன்று இபாஸ் முறையில் தளர்வுகளை அறிவித்தார். அதாவது திருமணம், இறப்பு, மருத்துவ சேவை உள்ளிட்ட காரணங்களுடன் அத்தியாவசிய பணிகளுக்கும் இபாஸ் வழங்கப்படும் என்றும் ஆதார் அட்டை, செல்போன் எண், ரேஷன் கார்டு கொடுத்தால் விண்ணப்பித்த எல்லாருக்கும் தங்கு தடையின்றி இபாஸ் கொடுக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு தற்போதைய இபாஸ் நடைமுறை தொடரும்: முதல்வர் அறிவிப்பு!

இந்த நிலையில், தற்போது கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு மட்டுமே என்றும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது பொருந்தாது என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு இப்போது இருக்கும் இபாஸ் விதிமுறைகள் எந்த மாற்றமும் இன்றி தொடரும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பவர்களுக்கு உடனே பாஸ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.