லடாக் மோதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை சுமந்து சென்ற சத்தீஸ்கர் மாநில முதல்வர்!

 

லடாக் மோதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை சுமந்து சென்ற சத்தீஸ்கர் மாநில முதல்வர்!

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இருநாடுகளுக்குமிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

லடாக் மோதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை சுமந்து சென்ற சத்தீஸ்கர் மாநில முதல்வர்!

இந்நிலையில் லடாக்கில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வீரர் கணேஷ் ராம் என்பவரும் உயிரிழந்தார். அவரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்களுக்காக அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின் அடக்கம் செய்ய கொண்டுபோன அவரது உடலை அம்மாநில முதல்வர் புபேஷ் பெஹல் சுமந்து சென்றார். கணேஷ்ராம் படித்த பள்ளிக்கூடம் இனி அவரது பெயரில் அழைக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.