உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு

 

உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு துயர சம்பங்களில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. இதில் இருந்து மக்கள் மீண்டெழ கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 70 முதல் 90 பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் உயிரிழப்பு 30% சதவீதம் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க சாலை விபத்து, பாம்பு கடி, யானை தாக்குதல், மின்கசிவு, மின்வேலி விபத்து உள்ளிட்ட பல்வேறு துயர சம்பவங்களில் மக்கள் உயிரிழக்கின்றனர். அவர்களது குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு

இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.