“பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும்” – முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

 

“பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும்” – முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

சேலம் மாவட்டம், இருப்பாளி பகுதியில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெறுகிறது. அதில் பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, வெல்லம் உள்ளிட்ட உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

“பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும்” – முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

மேலும், ஜனவரி 4ம் தேதி முதல் பொங்கல் பரிசு மக்களுக்கு வந்து சேரும் என்றும் வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.