அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்க உத்தரவு!

 

அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்க உத்தரவு!

கொரோனா வைரஸ் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. இதில் இருந்து மக்களை காக்க 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் அடுத்தக்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்க உத்தரவு!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடக்கைகளுடன் சேர்த்து ஏழை, எளிய மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் அளித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நோய்த்தொற்றில் இருந்து குணமடைபவர்கள் அதிகாமாகவும் உயிரிழப்பு குறைவாகவும் இருக்கிறது. தற்போது ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்திருக்கும் சுமார் 13.35 லட்சம் பேருக்கு தலா ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.