அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு!

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வந்த நிலையில், மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர், மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார். அதே போல, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி வந்தார்.

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு!

இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, விராலிமலையில் அமைக்கப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டு நினைவு சிலையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணி குறித்து ஆட்சியருடனும் சுகாதாரத்துறை ஊழியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், ரூ.300 கோடி செலவில் 211 தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு!

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, இலவசமாக மக்கள் அனைவருக்கும் அரசின் செலவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 2020-21 ஆம் நிதியாண்டில் சுமார் 500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.