“பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் அமைச்சர்களும் பார்ப்பதில்லை” அமைச்சர் செல்லூர் ராஜு

“பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் அமைச்சர்களும் பார்ப்பதில்லை” அமைச்சர் செல்லூர் ராஜு

அமைச்சர் பதவி என்பது முள் படுக்கையில் அமர்வது போன்றது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

“பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் அமைச்சர்களும் பார்ப்பதில்லை” அமைச்சர் செல்லூர் ராஜு

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “தங்களுக்கு உள்ள சினிமா இமேஜ் மூலம் ஆட்சிக்கு வரலாம் என சிலர் நினைக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளின் செயல்பாட்டில் அரசியல் குறுக்கீடு இல்லை. திமுக ஆட்சியில் கப்பலில் ரேஷன் அரிசி கடத்தல் நடந்தது. அமைச்சர் பதவி என்பது முள் படுக்கையில் அமர்வது போன்றது அமைச்சர்கள் மலர் படுக்கையில் அமரவில்லை. கூட்டணியை நம்பி அதிமுக இல்லை ;அதிமுகவிற்கு கூட்டணி என்பது பெரிதல்ல; மக்கள்தான் எஜமானர்கள். கூட்டணியில் இவர்கள் இருந்தால்தான் வெற்றி என்ற நிலைப்பாடு அதிமுகவுக்கு இல்லை ” என்று கூறியுள்ளார்.

“பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் அமைச்சர்களும் பார்ப்பதில்லை” அமைச்சர் செல்லூர் ராஜு

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு, “பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் அமைச்சர்களும் பார்ப்பதில்லை. அதிமுகவினர் யாருக்கும் பிக்பாஸ் பார்க்க நேரமில்லை” என்றார்.முன்னதாக அரியலூரில் நேற்று பேசிய முதல்வர் பழனிசாமி பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.