மூடப்பட்டது தஞ்சை பெரிய கோயில்…சோகத்தில் பக்தர்கள்!!

 

மூடப்பட்டது தஞ்சை பெரிய கோயில்…சோகத்தில் பக்தர்கள்!!

கொரோனா பரவல் காரணமாக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிதாக 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,91,917 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,185 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூடப்பட்டது தஞ்சை பெரிய கோயில்…சோகத்தில் பக்தர்கள்!!

இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 1,74,308 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 8 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அத்துடன் ஓரிரு நாட்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

மூடப்பட்டது தஞ்சை பெரிய கோயில்…சோகத்தில் பக்தர்கள்!!

இந்நிலையில் கொரோனா அதிகரிப்பால் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதான சின்னங்கள், கோயில்கள், அருங்காட்சியகங்களை மூடக்கோரி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் இன்றுமுதல் மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் மே 15 வரை தஞ்சை பெரியகோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் 4 நுழைவு வாயில்களையும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோயிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என்றும் கோயில் பணியாளர்கள் மற்றும் சிவாச்சாரியர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.