• April
    03
    Friday

Main Area

Main



சீன அதிபர் வருகை: 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Tasmac
Tasmac

நாளை முதல் மாமல்லபுரத்தில் இயங்கிவரும் இரண்டு அரசு மதுபான கடைகளை மூன்று நாட்களுக்கு மூட மாவட்ட மதுபான மேலாளர் அறிவுறுத்தியுள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். நாளை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் சீன அதிபர். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு மற்றும் கலாசார முறைப்படி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களின் வருகையையொட்டி சென்னையே விழாக்கோலம் பூண்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் தூய்மை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tasmac

இந்நிலையில் நாளை முதல் மாமல்லபுரத்தில் இயங்கிவரும் இரண்டு அரசு மதுபான கடைகளை மூன்று நாட்களுக்கு மூட மாவட்ட மதுபான மேலாளர் அறிவுறுத்தியுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.