இஎம்ஐ விவகாரத்தில் தெளிவான வழிகாட்டுதல்! – வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

இஎம்ஐ விவகாரத்தில் தெளிவான வழிகாட்டுதல்! – வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில் மாதத் தவணைகள் வசூலிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் வட்டி வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றித் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலரும் வேலையை இழந்துள்ளனர். இந்த நிலையில் இ.எம்.ஐ வசூலிக்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இஎம்ஐ வசூலிக்கக் கூடாது என்று உத்தரவு வந்தும் அதை வங்கிகள் கடைபிடிக்கவில்லை. வாடிக்கையாளர் விரும்பினால் மட்டுமே வசூலிக்க மாட்டோம் என்றும் அதற்கு வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறின. மேலும், இஎம்ஐ வசூலிக்காத காலத்துக்கு கூடுதல் வட்டி விதிக்கப்படும் என்று அறிவித்தன. இதனால், இஎம்ஐ கட்ட வேண்டிய காலம் ஒரு வருடம் அளவுக்கு கூட அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய நிதித்துறை இது தொடர்பாக பேசி முடிவு அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இஎம்ஐ விவகாரத்தில் தெளிவான வழிகாட்டுதல்! – வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுஅப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இஎம்ஐ வசூலிக்கத் தடைக் காலத்திற்கு வட்டி வசூலிக்கவில்லை என்றால் நிதி நிறுவனங்களின் உறுதி தன்மை பாதிக்கப்படும். வங்கியில் பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு வங்கிகள் வட்டி செலுத்தியாக வேண்டும். எனவே, வட்டி வசூலிக்காமல் தள்ளுபடி செய்வது சாதாரண விஷயம் இல்லை” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “மத்திய அரசு இஎம்ஐ வசூலிப்பதில் விலக்கு அளித்தால் அந்த பலன் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு போய் சேர வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய நிதித்துறை மற்றும் ரிசர்வ் வங்கி கவனிக்க வேண்டும். இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இஎம்ஐ-க்கு வட்டி வசூலிக்கும் பிரச்னை தொடர்பாக புதிய வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், இந்த வழக்கை ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.