ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்பு வாரியாக டிவியில் பாடம் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்பு வாரியாக டிவியில் பாடம் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி கல்லூகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவுவதால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதன் பேரில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி வெகுவாக எழுந்ததால், அவர்களுக்கு டிவி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்பு வாரியாக டிவியில் பாடம் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நம்பியூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், 14 தொலைக்காட்சிகள் மூலம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் முதன்முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் மாநிலம் தமிழகம் தான் என்றும் கூறினார். மேலும், பள்ளி திறப்பு மற்றும் பாடங்கள் குறைப்பு தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.