கஞ்சா கடத்தலுக்கு பள்ளி மாணவர்களை குறி வைக்கும் கூட்டம் -பாக்கெட் மணிக்கு ஆசைப்பட்டு பலியாகும் மாணவர்கள்..

கஞ்சா கடத்தலுக்கு பள்ளி மாணவர்களை குறி வைக்கும் கூட்டம் -பாக்கெட் மணிக்கு ஆசைப்பட்டு பலியாகும் மாணவர்கள்..

பாக்கெட் மணிக்கு ஆசைப்பட்டு கஞ்சா கடத்தும் கூட்டத்திடம் இப்போதெல்லாம் நிறைய மாணவர்கள் சிக்கிக்கொண்டு, கஞ்சா கடத்தும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

ஆக்ரா ரயில் நிலையத்தில் டெல்லிக்கு டாக்சியில் ஏற முயன்றபோது 20கிலோ கஞ்சா கடத்திவைத்துள்ளதாக மூவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர் .அந்த மூவரில் சீமா என்ற 23 வயது பெண் ,இம்ரான் என்ற 21 வயது ஆண் மற்றும் ஒரு 12ம் வகுப்பு படிக்கும் மாணவியும் அடங்குவர் .இதில் ஒரு பெண்ணும், ஆணும் வழக்கமாக கஞ்சா கடததுபவர்கள் .

கஞ்சா கடத்தலுக்கு பள்ளி மாணவர்களை குறி வைக்கும் கூட்டம் -பாக்கெட் மணிக்கு ஆசைப்பட்டு பலியாகும் மாணவர்கள்..
அவர்களோடு அந்த கூட்டத்திலிருக்கும் 12ம் வகுப்பு படிக்கும் மைனர் சிறுமி தனது பெற்றோரோடு டெல்லியில் வசித்து வந்தார், அவருக்கு பாக்கெட் மணியாக சிலவுக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. இதனால் “ராக்மண்ட்ரியில் இருந்து விசாகப்பட்டினம் வழியாக டெல்லிக்கு கஞ்சா கடத்தினால் ஒருவருக்கு ரூ .5000 முதல் ரூ .15,000 வரை வழங்கப்படும் என்று கஞ்சா கடத்தும் கூட்டம் கூறியது . இதனால் அந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு அந்த கூட்டத்துடன் ஏற்பட்ட தொடர்பாலும் ,ஆடம்பர சிலவுக்கு

கஞ்சா கடத்தலுக்கு பள்ளி மாணவர்களை குறி வைக்கும் கூட்டம் -பாக்கெட் மணிக்கு ஆசைப்பட்டு பலியாகும் மாணவர்கள்..

பணம் நிறைய தேவைப்பட்டதாலும் கஞ்சாவை மற்ற இருவரோடு சேர்ந்து கடத்த ஒப்புக்கொண்டார் .பள்ளி மாணவி மூலம் கஞ்சா கடத்தினால் போலிஸுக்கு சந்தேகம் வராது என்ற காரணத்தால் கஞ்சா கடத்துபவர்கள் இப்படி கஞ்சா கடத்த மாணவ மாணவிகளை உபயோகப்படுத்துகிறார்கள் .
கஞ்சா கடத்தும்போது கைதான மூவர் மீது போதை மருந்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.