பலாத்கார முயற்சியை எதிர்த்து போராடிய சிறுமி… தீ வைத்து கொன்ற காமக் கொடூரர்கள்!

இரு இளைஞர்கள் சேர்ந்து 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து, பின் தீ வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் சத்தீஸ்கரின் பேமெட்ரா பகுதியில் அரங்கேறியுள்ளது. 80 சதவீதத்திற்கும் மேல் தீக்காயங்களுக்கு ஆளான மைனர் சிறுமி உயிரிழந்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் மைனர் சிறுவன். குற்றம் சாட்டப்பட்ட இரு இளைஞர்கள் இறந்த சிறுமியின் பள்ளியில் மேல் வகுப்பில் பயிலும் மாணவர்கள். தனது கிராமத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

ஜூன் 22ஆம் தேதி, மாணவி தனது வீட்டிற்கு அருகில் உள்ள வயலில் இருந்துள்ளார் அப்போது, சிறுமி வீட்டில் யாரும் இல்லாததால் அங்கு வந்த இளைஞர்கள் சிறுமியை பலவந்தமாக பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். சிறுமி அவர்களை எதிர்த்து போராடி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் சிறுமியின் மீது தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

representative image

குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரான சரத் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர் 14 வயது மைனர் சிறுவனுடன் அங்கிருந்து தப்பியுள்ளார். சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சிறுமி வீட்டில் இல்லாததால் அவளைத் தேடியுள்ளனர். பக்கத்தில் உள்ள வயலில் சிறுமி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை விரைந்து மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் துரதிருஷ்ட வசமாக சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இறப்பதற்கு முன்பு நடந்த சம்பவத்தைப் பற்றி சிறுமி போலீசில் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!