“ஒரு கோடி கொடுக்கலேன்னா உன் மகனின் பிணம் தெருக்கோடியில்..” -சிறுவன் கடத்தி கொல்லப்பட்ட பரிதாபம்..

“ஒரு கோடி கொடுக்கலேன்னா உன் மகனின் பிணம் தெருக்கோடியில்..” -சிறுவன் கடத்தி கொல்லப்பட்ட பரிதாபம்..

குழந்தை கடத்தலும் ,பிறகு பெற்றோரை மிரட்டி பணம் கேட்பதும் நாட்டில் சர்வசாதாரணமாகிவிட்டது .இப்படி ஒரு கோடீஸ்வரரின் 14 வயது மகனை கடத்தி ஒரு கோடி தராததால் சிறுவனை கொலை செய்துள்ளனர் .
உ.பி.யின் கோரக்பூர் மாவட்டத்தில் பிப்ரைச் பகுதியில் ஒரு மளிகை ,மற்றும் பான் ஷாப் உரிமையாளரின் 14 வயது மகன், வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை விளையாடி கொண்டிருந்தான் .அப்போது ஒரு வேனில் அந்த பகுதியை சேர்ந்த தயானந் மற்றும் அவரின் கூட்டாளிகள் ஐந்து பேர் வந்து அந்த சிறுவனை தூக்கி சென்றனர் .

“ஒரு கோடி கொடுக்கலேன்னா உன் மகனின் பிணம் தெருக்கோடியில்..” -சிறுவன் கடத்தி கொல்லப்பட்ட பரிதாபம்..
பிறகு அவர்கள் அந்த சிறுவனின் தந்தைக்கு போன் செய்து “உடனே ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் ,இல்லையென்றால் உன் மகனின் பிணம்தான் உன் வீட்டிற்கு வரும் ,உன்னால் ஒரு கோடி ரூபாய் தரமுடியும் .ஏனென்றால் நீ மிகப்பெரிய பணக்காரன் . அதனால் போலீசுக்கு போவதை விட்டு ,உடனே பணத்தை எடுத்துக்கொண்டு நாங்கள் சொல்லுமிடத்திற்கு வா ,பணத்தை ரெடி பண்ணிட்டு இந்த நம்பருக்கு போன் செய் “என்று கூறி போனை வைத்துவிட்டார் .
இதனால் பயந்து போன அந்த சிறுவனின் தந்தை உடனே போலீசுக்கு தகவல் சொன்னார் .போலீசார் அவர்களின் நம்பரை ட்ரெஸ் செய்து பிடிப்பதற்குள் ,அந்த சிறுவனை திங்கள்கிழமை மாலையில் கொலை செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் வீசிவிட்டு சென்று விட்டனர் .
மறுநாள் சிறுவனின் பிணத்தை பார்த்து அழுத அவரின் தந்தை ‘,ஐயோ பணம் ரெடி செய்வதற்குள் என் மகனை கொன்றுவிட்டார்களே’ என்றார் .போலீசார் உடனே விரைந்து செயல்பட்டு இந்த கடத்தல் மற்றும் கொலையை செய்த தயானந்தன் மற்றும் அவரின் கூட்டாளிகளான ஜங்கிள் தூசர் பகுதியைச் சேர்ந்த அஜய் குப்தா மற்றும் மிஸ்ரூலியா கிராமத்தைச் சேர்ந்த நிகில் பாரதி ஆகியோரையும் ,
ஜங்கிள் தூசரில் வசிக்கும் நிதின் சவுகான் மற்றும் அஜய் சவுகான் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர் .

“ஒரு கோடி கொடுக்கலேன்னா உன் மகனின் பிணம் தெருக்கோடியில்..” -சிறுவன் கடத்தி கொல்லப்பட்ட பரிதாபம்..