சிபிஎஸ்இ போல தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு?!

 

சிபிஎஸ்இ போல தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு?!

சிபிஎஸ்இ போல் தமிழகத்திலும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிட்டு மதிப்பிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ போல தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு?!

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு , 11ம் வகுப்புகளில் தலா 30 சதவீத மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் என கணக்கிடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சிபிஎஸ்இ போல் தமிழகத்திலும் மாணவர்களுக்கு +2 மதிப்பெண் கணக்கீட்டு மதிப்பிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது . தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு, 5 வகையான மதிப்பீட்டு வழிமுறைகளை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ போல தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு?!

10,11 ஆம் வகுப்பு இறுதித்தேர்வு மார்க்குடன் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண்ணும் கணக்கிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது . 10 ஆம் வகுப்பு மார்க்கை தேர்வுத்துறை கேட்ட நிலையில் அதிலிருந்து அதிகளவில் மார்க் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.