“என்னோட வாழனும் ,இல்லேன்னா சாகனும்” -ஒன்பதாம் வகுப்புக்கும் பத்தாம் வகுப்புக்கும் உருவான காதலின் கதி.

 

“என்னோட வாழனும் ,இல்லேன்னா சாகனும்” -ஒன்பதாம் வகுப்புக்கும் பத்தாம் வகுப்புக்கும் உருவான காதலின் கதி.


பக்கத்து வீட்டு பெண்ணை காதலித்த ஒரு வாலிபர் அந்த பெண்ணை கொன்று மரத்தில் தூக்கில் தொங்க விட்டதால் போலீசார் அவரை கைது செய்தார்கள்

உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் 18 வயது அர்ஜுன் குமார் பத்தாம் வகுப்பில் படிக்கிறார் .அவர் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்தார் .இருவரும் தங்களின் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்தார்கள் .இந்நிலையில் இவர்களின் காதல் கதை இருவரின் வீட்டிற்கும் நாளடைவில் தெரிய வந்துள்ளது .
அப்போது அந்த ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இருவரையும் கூப்பிட்டு பஞ்சாயத்து நடந்துள்ளது .அப்போது அந்த பெண்ணின் பெற்றோர்கள் அந்த பெண் தொடர்ந்து படிக்க வேண்டுமென்றும் ,அதனால் தாங்கள் அந்த வாலிபருக்கு தங்களின் பெண்ணை கல்யாணம் செய்து தர முடியாதென்றும் கூறினார்கள் .அதனால் இருவரும் காதலை தொடரக்கூடாதென்று பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டது .ஆனால் அந்த வாலிபர் அர்ஜுன் அவர்கள் பேச்சை கேட்காமல் அந்த பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்தார் .மேலும் கடந்த வாரம் அந்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் அங்குள்ள காட்டு பகுதிக்கு வரச்சொன்னார் .அவரின் பேச்சை நம்பி போன அந்த பெண்ணை அந்த காதலர் அர்ஜுன் தனக்கு கிடைக்காத அவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று முடிவு செய்துள்ளார் .அதனால் அந்த பெண்ணை கொன்று அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டு விட்டு தப்பி யோடி விட்டார் .மறுநாள் தன்னுடைய மகளை காணாத அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து அந்த பெண்ணை கொன்ற வாலிபர் அர்ஜுனை கைது செய்தார்கள் .

“என்னோட வாழனும் ,இல்லேன்னா சாகனும்” -ஒன்பதாம் வகுப்புக்கும் பத்தாம் வகுப்புக்கும் உருவான காதலின் கதி.