மாவட்ட செயலாளர் நியமனத்துக்கு எதிர்ப்பு; அதிமுகவில் கோஷ்டி மோதல்!

 

மாவட்ட செயலாளர் நியமனத்துக்கு எதிர்ப்பு; அதிமுகவில் கோஷ்டி மோதல்!

விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளரை தெற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்ததற்கு சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தை அதிமுக சார்பில் இரண்டாக பிரித்து வடக்கு மாவட்டம் தெற்கு மாவட்டம் என அறிவித்து தெற்கு மாவட்டச் செயலாளராக ராமுத்தேவன்பட்டியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை தலைவருமான காளிமுத்து என்பவரின் உடன் பிறந்த சகோதரர் ரவிச்சந்திரன் என்பவரை அதிமுக தலைமை நியமனம் செய்தது. ரவிச்சந்திரன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர் ஆவார். அமைச்சரின் ஆதரவாளர்கள் எதிர் கோட்டைக்கு சென்று மணிகண்டன் என்ற சாத்தூர் எம்எல்ஏ ஆதரவாளர் வீட்டு முன்பு பட்டாசு வெடித்து, அவரது தம்பி வெம்பக்கோட்டை யூனியன் கவுன்சிலர் திருமலை என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

மாவட்ட செயலாளர் நியமனத்துக்கு எதிர்ப்பு; அதிமுகவில் கோஷ்டி மோதல்!

எனவே எதிர் கோட்டையில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஆலங்குளத்தில் இருந்து மோட்டார் பைக்கில் சென்ற அமைச்சரின் ஆதரவாளர்கள் 25 பேரை துரத்தி விட்டனர். இதனால் போர்களமானது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஆலங்குளம் போலீசார் மணிகண்டன் உறவினர்கள் நாலு பேரை பிடித்து வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும், 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன