திண்டிவனம் அருகே இரு தரப்பினர் இடையே மோதல் – மூவர் படுகாயம்

 

திண்டிவனம் அருகே இரு தரப்பினர் இடையே மோதல் – மூவர் படுகாயம்

விழுப்புரம்

திண்டிவனம் அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோஷணை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தியாகு(31). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சந்துரு(24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு ரோஷணை கிராமத்தில் உள்ள அங்காள அம்மன் கோயில் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இதில் இருதரப்பினரும் கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதல் சம்பவத்தில் தியாகு, சந்துரு மற்றும் கார்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

திண்டிவனம் அருகே இரு தரப்பினர் இடையே மோதல் – மூவர் படுகாயம்

மோதல் குறித்த தகவல் அறிந்த ரோஷணை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று. மூவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சந்துரு மற்றும் கார்த்தி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மோதல் சம்பவம் குறித்து ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.