“தமிழ்நாடு வளர்ச்சிக்கா? அதானி வளர்ச்சிக்கா?” – போர்க்களமான அண்ணாமலையின் ட்வீட்!

 

“தமிழ்நாடு வளர்ச்சிக்கா? அதானி வளர்ச்சிக்கா?” – போர்க்களமான அண்ணாமலையின் ட்வீட்!

தமிழ்நாட்டின் விமான நிலையங்களின் விரிவாக்கப் பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தின் நகலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அதில், “இவை அனைத்தும் நமது நாடு மற்றும் மாநிலத்திற்கான விமான உள்கட்டமைப்பை விரைவுபடுத்தவும் வலுப்படுத்தவும் உதவும்.

“தமிழ்நாடு வளர்ச்சிக்கா? அதானி வளர்ச்சிக்கா?” – போர்க்களமான அண்ணாமலையின் ட்வீட்!


ஆகவே அமைச்சர் சிந்தியா வைத்த கோரிக்கைகளைப் பரிசீலித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விரைவில் தீர்வு காண வேண்டும்” என்றும் கூறியிருந்தார். அண்ணாமலையின் ட்வீட்டுக்கு பல்வேறு தரப்பினரும் கமெண்ட் செய்தனர். விருதுநகர் காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர் விமர்சித்து கமெண்ட் செய்தார்.

அதில், “மாண்புமிகு அமைச்சர் சிந்தியா பட்டியலிட்டுள்ள நிலம் அதானியிடம் ஒப்படைக்கப்படாது என்று உறுதியளிப்பாரா? இத்திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கா அல்லது அதானிக்கான வளர்ச்சிக்கா?” என்று வினவியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “எப்போதுமே அழிவு நோக்கத்தோடும் அவநம்பிக்கையான மனநிலையும் கொண்டிருப்பவர்களுக்கு என்ன பதிலளித்தாலும் திருப்தியளிக்காது” என்றார். அதற்கு பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர் “என் மக்களின் நிலம் அபகரிக்கப்படக் கூடாது என்கிற எண்ணத்துடன் கேள்வி எழுப்புவதுதான் உங்களுக்கு தீய நோக்கமாகத் தெரிந்தால் நான் தீய நோக்கத்துடனே இருந்துவிட்டுப் போகிறேன்” என்று காட்டாமகக் கூறியிருக்கிறார்.