காவல்நிலையத்தில் புகார் அளிப்பது தொடர்பாக சந்தேகம் இருக்கிறதா?…அப்போ இந்த நியூஸ் உங்களுக்காகத் தான்!

காவல்நிலையத்தில் புகார் அளிப்பது தொடர்பாக சந்தேகம் இருக்கிறதா?…அப்போ இந்த நியூஸ் உங்களுக்காகத் தான்!

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. பேரிடர் காலத்தில் மக்கள் நேரில் வந்து புகார் தெரிவிக்க வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாக வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கலாம் எனச் சென்னை காவல்துறை தெரிவித்திருந்தது.

காவல்நிலையத்தில் புகார் அளிப்பது தொடர்பாக சந்தேகம் இருக்கிறதா?…அப்போ இந்த நியூஸ் உங்களுக்காகத் தான்!

அதாவது 6369 100 100 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வீடியோ கால் மூலமாகப் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி, வீடியோ காலில் புகார் அளிப்பதற்கான சேவை நேற்று தொடங்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத இந்த இக்கட்டான சூழலில் பல குற்றங்கள் நடந்து வருவதால் மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளிப்பது தொடர்பாக உங்கள் சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை காண நாளை மாலை 5 மணிக்கு இந்த ஆன்லைன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. https://us02web.zoom.us/j/81380055145 இந்த லிங்க்கை பயன்படுத்தி மக்கள் அவர்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.