ஈபிஎஸ்-சை வம்பிழுக்கும் தினகரன்; தேமுதிக கூட்டணியால் கூடுதல் பலமா?

 

ஈபிஎஸ்-சை வம்பிழுக்கும் தினகரன்; தேமுதிக கூட்டணியால் கூடுதல் பலமா?

இலவசங்களை கொடுப்பதாக கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளார். இதனால் கோவில்பட்டியில் முகாமிட்டுள்ள அவர், செண்பகவல்லியம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜை மேற்கொண்டார்.

ஈபிஎஸ்-சை வம்பிழுக்கும் தினகரன்; தேமுதிக கூட்டணியால் கூடுதல் பலமா?

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “கோவில்பட்டி மக்கள் எங்களை வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் நேரத்தில் இலவசங்களை அளிப்பது மக்களை ஏமாற்றும் வேலை. அதற்கு பதிலாக அவர்கள் சுயமான சம்பாதிக்கும் படி செய்தால் போதும். அதனால் தான் அமமுக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்று கூறியுள்ளது. இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் போது தான் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்லும். அதை அமமுக நிச்சயம் செய்யும்” என்றார்.

ஈபிஎஸ்-சை வம்பிழுக்கும் தினகரன்; தேமுதிக கூட்டணியால் கூடுதல் பலமா?

தொடர்ந்து பேசிய அவர், அமமுகவுடன் கைகோர்த்துள்ள தேமுதிகவுக்கு 60 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பூரண மதுஒழிப்பு அமலுக்கு வரும். புதிய மதுபான தொழிற்சாலைகள் திறக்கப்படாது என்று கூறியதுடன் சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றார். முன்னதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு இலவச வாஷிங் மிஷின் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து பேசிய அவர், அமமுகவுடன் கைகோர்த்துள்ள தேமுதிகவுக்கு 60 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பூரண மதுஒழிப்பு அமலுக்கு வரும். புதிய மதுபான தொழிற்சாலைகள் திறக்கப்படாது என்று கூறியதுடன் சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.