Home இந்தியா கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜெயில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் தர்மேந்திர வால்வி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பெயில் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விசாரித்தார். அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே குற்றவாளி சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? இன்று பகவான் கிருஷ்ணர் ஜெயிலில் பிறந்த தினம். நீங்கள் சிறையிலிருந்து வெளியே செல்ல விரும்புகிறீர்களா? என நகைச்சுவையாக கேட்டார். அதற்கு வழக்கறிஞர் பெயில் வேண்டும் என உறுதிமொழியில் பதிலளித்தார். பின் பெயில் வழங்குவதற்கு முன், மதம் என்பது நீங்கள் மிகவும் இணைக்கப்பட்ட ஒன்றல்ல என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம்

1994ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தர்மேந்திர வால்வி மற்றும் அந்த கட்சியை சேர்ந்த 5 பேரும், தங்களது எதிர்கட்சியான பா.ஜ.க. தலைவர் ஒருவரை கொலை செய்தனர். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் கீழ் நீதிமன்ற தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தர்மேந்திர வால்வி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Most Popular

பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை : ஓபிஎஸ் உறுதி!

பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதியளித்துள்ளார். திருச்சி...

“உடைய கழட்டுங்க ,உறவு கொள்ளுங்க”-கள்ள காதலர்களை மிரட்டி படம் பிடித்த டுபாக்கூர் போலீஸ்

ஒருவர் தன்னை போலிஸ் என்று பொய் சொல்லி பல காதலர்களை மிரட்டி பலாத்காரம் மற்றும் ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டின் ரசூலாபாத் பகுதியில் உள்ள...

‘விவசாயி என தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர் இந்த சட்டங்களை ஆதரிப்பது துரோகம் இல்லையா?’ : கமல் ஹாசன்

தமிழக விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அதிமுக அரசு மிகப்பெரும்துரோகத்தைச் செய்திருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில்,...

சென்னை- பைக் திருட்டில் ஈடுபட்ட சமையல் மாஸ்டர் – பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைப்பு!

சென்னை மதுரவாயலில் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை பொதுமக்களே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை மதுரவாயல் வேல்நகர்...
Do NOT follow this link or you will be banned from the site!