சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் – யு.பி.எஸ்.சி

 

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் – யு.பி.எஸ்.சி

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்கள் வைத்து, இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன்படி நடப்பு ஆண்டு 796 சிவில் சர்வீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது. முதல்நிலை தேர்வு மே 31-ம்தேதி நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கால் தேர்வு நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் – யு.பி.எஸ்.சி

இந்நிலையில் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள்(preliminary exam) அக்டோபர் 4ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய பொருளியல் தேர்வுகள் அக்டோபர் 16ஆம் தேதி நடத்தபடும் என்றும் யு.பிஎஸ்.சி அறிவித்துள்ளது. புதிய தேர்வு தேதிகளையும் அறிவித்தது.