நிலைமை கொஞ்சம் இயல்புக்கு திரும்பியவுடன் சர்வதேச விமான சேவை குறித்து பரிசீலனை… மத்திய அமைச்சர் தகவல்

நிலைமை கொஞ்சம் இயல்புக்கு திரும்பியவுடன் சர்வதேச விமான சேவை குறித்து பரிசீலனை… மத்திய அமைச்சர் தகவல்

கொரோனா வைரஸ் நிலைமை கொஞ்சம் இயல்புக்கு திரும்பியவுடன் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்ததுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்களில், கோவிட்-19 நிலைமை கொஞ்சம் இயல்பானதும் மற்றும் மக்களுக்கு எந்த ஆபத்து ஏற்படாத என்பது உறுதியானதும் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்வோம்.

நிலைமை கொஞ்சம் இயல்புக்கு திரும்பியவுடன் சர்வதேச விமான சேவை குறித்து பரிசீலனை… மத்திய அமைச்சர் தகவல்

நாம் பறக்கும் விரும்பு நாடுகள் உள்வரும் வெளிநாட்டு குடிமக்களுக்கு திறந்திருக்கும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 3ம் கட்ட வந்தே பாரத் மிஷனில் மேலும் பல விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் மற்ற நாடுகளுக்கு செல்ல விரும்பும் பயணிகளையும் அழைத்து செல்லும். அவர்களை விமான அழைத்து செல்வதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

நிலைமை கொஞ்சம் இயல்புக்கு திரும்பியவுடன் சர்வதேச விமான சேவை குறித்து பரிசீலனை… மத்திய அமைச்சர் தகவல்

கடந்த மே 6ம் தேதி முதல் வந்தே பாரத் மிஷன்கீழ் 312 விமானங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து 57 ஆயிரம் குடிமக்கள் நாட்டுக்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர். மற்றும் இந்திய குடிமக்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் ஓ.சி.ஐ. கார்டு வைத்திருப்பவர்கள் என மொத்தம் 13 ஆயிரம் பேர் இந்தியாவிலிருந்து மொத்தம் 314 விமானங்களில் மற்ற நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு அதில் பதிவு செய்துள்ளார்.