’நீங்கள் இந்தியர்தானே?’ கனிமொழியிடம் கேள்விக்கேட்ட விவகாரம்; விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு

’நீங்கள் இந்தியர்தானே?’ கனிமொழியிடம் கேள்விக்கேட்ட விவகாரம்; விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு

திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தான் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “விமான நிலையத்தில் எனக்கு இந்தி தெரியாததால் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால், அந்த அதிகாரியோ ‘நீங்கள் இந்தியர் தானே’ என்று கேட்டார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

’நீங்கள் இந்தியர்தானே?’ கனிமொழியிடம் கேள்விக்கேட்ட விவகாரம்; விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு

விமான நிலையத்தில் மொழி தொடர்பாக சிஐஎஸ்எஃப் அதிகாரியால் எழுந்த விவகாரத்தில் கனிமொழியிடம் இந்தியில் அதிகாரி கேள்வி கேட்டது பற்றி விசாரிக்க சிஐஎஸ்எஃப் உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் யாரிடமும் எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப்பின் கொலை அல்ல எனவும் விளக்கமளித்துள்ளது.