மருந்து விற்பனை அமோகம்… லாபமாக ரூ.566 கோடி அள்ளிய சிப்லா

 

மருந்து விற்பனை அமோகம்… லாபமாக ரூ.566 கோடி அள்ளிய சிப்லா

மருந்து துறை நிறுவனமான சிப்லா உலகின் பல நாடுகளில் மருந்து விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது. அந்நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் சிப்லா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.566 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 26.6 சதவீதம் அதிகமாகும்.

மருந்து விற்பனை அமோகம்… லாபமாக ரூ.566 கோடி அள்ளிய சிப்லா

இந்தியா, வளரும் நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிப்லா நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததே லாபம் அதிகரிப்புக்கு முக்கிய காரணம். கடந்த ஜூன் காலாண்டில் சிப்லா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.4,346.2 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும்.

மருந்து விற்பனை அமோகம்… லாபமாக ரூ.566 கோடி அள்ளிய சிப்லா

2020 ஜூன் காலாண்டில், இந்தியாவில் மட்டும் சிப்லா நிறுவனத்தின் வர்த்தகம் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1,608 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் வட அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 19 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.1,021 கோடியாக சரிவடைந்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் நேற்று சிப்லா நிறுவன பங்கின் விலை 9.20 சதவீதம் அதிகரித்து ரூ.795.65ல் முடிவுற்றது.