90% செயல்திறன் கொண்ட அமெரிக்காவின் மாடர்னோ தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

 

90% செயல்திறன் கொண்ட அமெரிக்காவின் மாடர்னோ தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

கொரோனா இரண்டாம் அலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொடக்கத்தில் இந்தியாவில் இருக்கும் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து 100% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகித்தது. இதனால் பெருமளவில் தட்டுப்பாடுகள் இல்லை.

90% செயல்திறன் கொண்ட அமெரிக்காவின் மாடர்னோ தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

மே 1ஆம் தேதி முதல் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமாகும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதையொட்டி 100% தடுப்பூசி கொள்முதல் கொள்கையைக் கைவிட்டு 50% மத்திய அரசும் 50% மாநில அரசுகளும், தனியாருக்கும் பிரித்துக் கொள்ள வேண்டும் என புதிய கொள்கையை மத்திய அரசு வகுத்தது. இது ஆரம்பத்தில் நல்ல கொள்கையைப் போல் தெரிந்தாலும் போகப் போக வேலையைக் காட்டியது. தடுப்பூசி நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு வழங்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும், பிளாக் மார்க்கெட்டில் தனியாருக்கும் விற்பனை செய்தன.

90% செயல்திறன் கொண்ட அமெரிக்காவின் மாடர்னோ தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

இதனை மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை சரமாரியாக விமர்சித்தது. கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. அந்த தொகையில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு மத்திய அரசால் தடுப்பூசி கொள்முதல் செய்ய முடியாதா என நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
அதேபோல மாநில அரசுகளும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தன.

90% செயல்திறன் கொண்ட அமெரிக்காவின் மாடர்னோ தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

இதனால் மத்திய அரசு அதிகப்படியான தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலிருந்து புதிய தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி அதிக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகிப்பதாக தெரிவித்தது. அதற்காக உள்நாட்டில் தடுப்பூசிகளைத் தயாரித்தாலும், வெளிநாட்டு நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த தடுப்பூசி நிறுவனம் தயாரித்த மாடர்னோ தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

90% செயல்திறன் கொண்ட அமெரிக்காவின் மாடர்னோ தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் (DGCA) அவசரக்கால பயன்பாட்டுக்காக மாடர்னோ தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யவும் தயாரிக்கும் உரிமையையும் மும்பையைச் சேர்ந்த சிப்லா நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனமே இந்தியா முழுவதும் மாடர்னோ தடுப்பூசிகளை விநியோகிக்கும். இதற்கான விலை எவ்வளவு என விரைவில் அறிவிப்பு வெளியாகும். கொரோனா வைரஸுக்கு எதிராக 90 சதவீதம் செயல்திறன் கொண்டது மாடர்னோ தடுப்பூசி. பிரிட்டனின் கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்குப் பிறகு வெளிநாட்டைச் சேர்ந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்துள்ளது.